மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பான தகவல்களை அறிந்துக்கொள்ள புதிய தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மஹர சிறையில் இடம்பெற்ற அமைதியின்மையின் பின்னர், சிறையில் உள்ள தமது உறவினர்களின் நிலை குறித்து அறிந்துக்கொள்வதற்காக, கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்துக்கு வருகைத் தருவதாலேயே, இவ்வாறு தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
இதற்கமைய 0112-678600 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு கைதிகள் குறித்த தகவல்களை அறிந்துக்கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

