655 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

204 0

கொவிட்-19 கொரோனா தொற்றுக் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 655 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, சவூதி அரேபியாவிலிருந்து 293 பேர், கட்டாரி லிருந்து 111 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 191 பேர் மற்றும் மாலைதீவிலிருந்து 60 பேர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.