தமது கட்சிக்கு கிடைத்துள்ள ஒரேயொரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு நியமிக்கப்படுபவர் யார் என்பது தொடர்பில் இந்த மாதம் நிறைவடைவதற்குள் அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் சமல் சேனரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்வதற்கு, கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

