கண்டி நகரத்தைச் சுற்றியுள்ள உடவத்தகல வனப்பகுதியில் சமீபத்தில் குரங்குகள் இறந்தமைக்கு கொரோனா காரணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குரங்குகளுக்கு யாரேனும் விஷம் வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுகின்றது.
இறந்த குரங்குகளில் ஒன்றில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் இந்த மரணம் கோவிட் -19 தொடர்பானது அல்ல என்பது தெரியவந்தது என்று சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உடவத்தகல வனப்பகுதியில் அண்மையில் பல குரங்குகள் திடீரென இறந்து கிடந்தன. இதற்கு காரணம் கோவிட் -19 காரணமாக இருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டது.
இந்த அச்சத்தின் மத்தியில் இறந்த குரங்கு ஒன்றுக்கு பி.சி.ஆர் சோதனை செய்யப்பட்டது.
பேராதெனிய பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட நோயியல் நிபுணர் கவிந்த விஜேசுந்தர சண்டே டைம்ஸிடம் குரங்குகள் விஷம் காரணமாக இறந்துவிட்டதாகவும், COVID க்கு எதிர்மறையாக சோதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

