மஹர சிறைச்சாலையில் கலவரத்தினால் பலியான இருவரின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.பொலிஸ்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளனர்.
மஹரசிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காட்டினார்கள் என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அடையாளம் காணப்பட்ட ஒருவர் ஜா-எல பகுதியை சேர்ந்த 39 வயதான நபர் என தெரிவித்துள்ளார்.
அவர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் அடையாளம் காணப்பட்ட மற்றொருவர் வத்தளையை சேர்ந்த 31 வயதானவர் அவரும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர் என குறிப்பிட்டுள்ளார்.
மஹரசிறைச்சாலை கலவரத்தின் போது உயிரிழந்த மேலும் 9 பேரின் உடல்களை அடையாளம் காணவேண்டியுள்ளது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் குறித்து ராகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர், என குறிப்பிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர் சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தவர்களில் 8 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது உறுதியாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள சிஐடியினர் நேற்று வத்தளை நீதவான் முன்னிலையில் அறிக்கையொன்றினை தாக்கல் செய்துள்ளனர்.
மஹர சிறைச்சாலை கலவரம் குறித்து 20 சிஐடி அதிகாரிகள் விசாரணைனகளை முன்னெடுத்துள்ளனர்.

