மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணி குறித்து ஆராய்வதற்காக, நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவினர், இன்று (03) மஹர சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளனர்.
மேற்படி குழுவின் அறிக்கை கிடைத்ததன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், ஒருவாரத்தில் இடைக்கால அறிக்கை கோரிக்கை கோரியுள்ளதாகத் தெரிவித்த அவர், முழுமையான அறிக்கையை ஒரு மாத காலத்துக்குள் சமர்பிக்க வேண்டும் என கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

