சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேக நபர்களை மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த வழக்கு புதன்கிழமை(2) கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது வீடியோ கன்பிரன்ஸ்(காணொளி) ஊடாக சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, குறித்த 12 சந்தேக நபர்களையும் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
குறித்த விசாரணையின் போது மேலதிக அறிக்கைகள் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் சந்தேகநபர்கள் விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

