கருணாவிற்குப் பிணை

264 0

karunaஅரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

10 இலட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு சரீர பிணைகளில் செல்ல, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று உத்தரவிட்டார்.

அத்துடன், வெளிநாட்டுக்குச் செல்ல, கருணா அம்மானுக்கு தடை விதித்த நீதவான், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அடுத்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி நடைபெறும் என்றும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

விநாயகமூர்த்தி முரளிதரன் நவம்பர் மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.