வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரை மீதேறி தற்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரே தங்களின் வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
இதன் காரணமாக சிறைச்சாலையின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

