இலங்கைக்கு ஒரு இலட்சம் துரித ஆன்டிஜன் பரிசோதனை கருவிகள் – உலக சுகாதார ஸ்தாபனம்

331 0

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிராந்தியம் மற்றும் தென் கிழக்கு ஆசிய பிராந்திய அலுவலகம் ஆகியன இணைந்து கொரோனா கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம் துரித ஆன்டிஜன் பரிசோதனை கருவிகளை வழங்கியுள்ளன.

அத்துடன், எதிர்வரும் வாரங்களில் மேலும் ஒரு இலட்சம் துரித ஆன்டிஜன் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த பெக்டன் டிக்கின்சன் நிறுவனம் புதிய ஆன்டிஜன் பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 10-30 நிமிடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்ற முடிவைத் தெரிந்துகொள்ளலாம் என கூறப்படுகிறது.

இந்த பரிசோதனை கருவியை எளிதில் எங்கு வேண்டுமென்றாலும் கொண்டு செல்லலாம் என்றும் இதற்காகப் பரிசோதனை கூடம் எதுவும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.