துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனையை வழங்கியதற்காக பதவி உயர்வை கோரினாரா நீதிபதி?

226 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு மரணதண்டனையை வழங்கிய நீதிபதி அதற்காக தனக்கு பதவி உயர்வுவேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


அரசியல் பழிவாங்கல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட நீதிபதி துமிந்த சில்வாவிற்கு வழங்கிய தண்டனை உட்பட தனது சேவைக்காக பதவி உயர்வை கோரியுள்ளார் என ஆணைக்குழு முன்னிலையில் தகவல் வெளியாகியுள்ளது.
துமிந்தசில்வாவின் தந்தையின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் சிஐடியின் முன்னாள் இயக்குநர் சானி அபயசேகரவிற்கும் இடையிலான உரையாடல்கள் மூலமும் நீதிபதி அரசியல் ரீதியிலான செல்வாக்கிற்கு உட்பட்டு தீர்ப்பை வழங்கினார் என்பது தெளிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவின் தீர்ப்பு வெளியானவுடன் ரஞ்சன் ராமநாயக்க சிஐடியின் இயக்குநரை தொடர்புகொண்டு நீதிபதிக்கு பாராட்டுகளை தெரிவிக்கவேண்டுமா என கேட்டார் எனவும துமிந்த சில்வாவின் தந்தையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.