யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு வீடுகளை அமைத்தல் மற்றும் அம்மாகாணங்களில் உல்லாசப் பயணத்துறையை மேலும் முன்னேற்றல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் சீன நாட்டின் உயர்மட்ட குழுவுக்கும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் சீனாவின் முன்னணி நிறுவனமான “ATIDESOFT” நிறுவனத்தின் தலைவர் ஸைசன்ங் ஷான்ங்இ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணைப்புச் செயலாளர் பாலித பெல்பொல உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்