ரஷ்ய வான்தாக்குதல் – சிரியாவில் 46 பேர் பலி

292 0

113சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களில் 46 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் 7 சிறுவர்களும், 6 பெண்களும் உள்ளடங்குவதாக பிரித்தானியாவை தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இதன்போது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதிலிப் மாகாணத்திலுள்ள கபார் நபால் என்ற கிராமத்திலுள்ள மக்கள் குடியிறுப்பு பகுதியிலேயே ரஷ்ய வான் படையினர் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவித்துள்ளது.