கருணா அம்மானின் பிணை கோரிக்கை நிராகரிப்பு – நீதவான் நீதிமன்றம்

279 0

download-1கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைககப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநயாகமூர்த்தி முரளிதரனின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரச வாகனமொன்றை தவறன முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு டிசம்பர் 7 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பிணை கோரிக்கை முனவைக்கப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.