ஜெயலலிதா காலமானதாக வெளியான செய்தியை அப்பலோ மருத்துவமனை நிராகரித்துள்ளது.

335 0

apollo_hispital_flag_liveday_ok5kq5தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் காலமானதானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அப்பலோ மருத்துவமனை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜெயலலிதா காலமானதாகவும், இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன.

எனினும், இதனை மறுத்துள்ள அப்பலோ மருத்துவமனை தரப்பினர் ஜெயலலிதா தொடர்ந்தும் உயிர்காப்பு கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சைக்கு உட்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ராயப்பேட்டையில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை செயலகத்தில் கட்சி கொடி அரைக்கப்பத்தில் பறக்கவிடப்பட்ட போதிலும், பின்னர் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் காலமானதானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை மருத்துவமனை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஜெயலலிதா காலமானதாகவும், இந்திய ஊடகங்கள் சில் செய்தி வெளியிட்டன.

எனினும், இதனை மறுத்துள்ள மருத்துவ மனை தரப்பினர் ஜெயலலிதா தொடர்ந்தும் தீவிர சிகிச்சைக்கு உட்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ராயப்பேட்டையில் உள்ள அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமை செயலகத்தில் கட்சி கொடி அரைக்கப்பத்தில் பறக்கவிடப்பட்ட போதிலும், பின்னர் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 73 நாட்களாக மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில். செயற்கை உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடனான மருத்துவ பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், அவரின் உடல்நிலை பாரிய அபாய நிலைலேயே உள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைவர்கள், தமிழக தலைமைச் செயலாளர் உட்பட பலர் மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.