தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்

265 0

jayalalithaa-icu-photo-jayalalithaa-appolo-hospital-photo-viral-whatsappதமிழக முதலமைச்சர் ஜெயலலிதா (68) மாரடைப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடல் சென்னை திருவல்லிகேணியில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதனையடுத்து ஜெயலலிதாவிற்கு இதய நோய் மருத்துவர்கள், சுவாசயியல் நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். அதுமட்டுமில்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் சென்னை அப்பலோவிற்கு வந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் மருத்துவமனையில் பிரிந்தது.