128 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

318 0

கொரோனா வைரஸ் பரலையடுத்து நாடு திரும்ப முடியாமல் சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றி அதிகாரிகள் உள்ளிட்ட 128 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட அனைவரும் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சீனாவிலிருந்து 5 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 59 பேரும், கட்டாரிலிருந்து 39 பேரும், டுபாய் தூதரகதத்தில் பணியாற்றிய இலங்கையர்களும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவரும் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைகள் ஊடாக பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.