ஜெர்மனியில் Matrix திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, அதைக் கொண்டாடுவதற்காகப் படப்பிடிப்பு போல் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பெர்லினின் (Berlin) கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளை மீறிய அந்த நிகழ்ச்சியில், பிரபல நடிகர் கியானு ரீவ்ஸ் (Keanu Reeves) உட்பட சுமார் 200 பேர் கலந்துகொண்டதாக The Guardian செய்தி இணையத்தளம் கூறியது.
அது குறித்து, படப்பிடிப்பு நடைபெற்ற கூடத்தின் உரிமையாளருடன் பேசத் திட்டமிடுவதாக ஜெர்மனியின் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சந்தேகம் எழுவதைத் தவிர்க்க, படப்பிடிப்பு போல் அமைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில், விருந்தினர்கள் படத்தில் நடிக்க வந்த நடிகர்கள் போல் வருகையளித்ததாக The Guardian தெரிவித்தது.
நிகழ்ச்சிக்கு முன், அனைவரும் COVID-19 பரிசோதனை மேற்கொண்டதாக அதில் கலந்துகொண்ட ஒருவர் கூறினார்.
பெர்லினில் 50 பேர் வரையிலான நிகழ்ச்சிகளை நடத்த மட்டுமே அனுமதி உண்டு.

