பாகிஸ்தான்: ஓட்டல் தீ விபத்தில் 11 பேர் பலி

252 0

201612051232260596_11-killed-30-injured-in-pakistan-hotel-fire_secvpfபாகிஸ்தானில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்றுகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தானில் கராச்சியில் ‌ஷகாரா-இ-பைசல் என்ற 4 நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு இன்று காலை தரைத்தளத்தில் உள்ள சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீ ‘மள…மள…’வென பரவி ஓட்டலின் 6 மாடிகளிலும் பிடித்தது.

தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் அங்கு தங்கியிருந்த 100-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக வெளியேற்றினர். இருந்தும் இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 30 பேர் காயம் அடைந்தனர்.

அவர்கள் 6 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள். மற்றும் ஒரு குழந்தையும் அடங்குவர். தீ விபத்தில் 3 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை சீராக உள்ளது.

தீ விபத்து நடந்தபோது இந்த ஓட்டலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்தனர். யாஷின் முர்தஷா 2-வது மாடியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். இதனால் அவரது கணுக்கால் மூட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கண்ணாடியை உடைத்து வெளியேறியதால் கராமத் அலிக்கு காயம் ஏற்பட்டது. சோகிப் மசூத் காயமின்றி தப்பினார்.