வடகொரியாவில் பொது இடங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்கும் வகையில் புகையிலை தடை சட்ட மசோதா நிறைவேறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இச் சட்டத்தை மீறி பொது இடங்களில் புகை பிடிப்போருக்கு அபராதம் விதிக்கப்படுமெனவும் கூறப்படுகின்றது.
இந் நிலையில் வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் என்பதால் இச் சட்டத்தால் அவர் இனிவரும் நாட்களில் புகைப் பிடிப்பதைக் கைவிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

