சுயதனிமைப்படுத்தலில் இருந்து மீண்ட நபர் தற்கொலை

412 0

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 55 வயதான நபர் ஒருவரே இவ் வாறு உயிரிழந்துள்ளதாகவும் , குறித்த நபர் புத்தளம் பகுதியில் உள்ள வீதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் புத்தளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோ ட்டல் ஒன்றில் பணியாற்றிய ஊழியர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த ஹோட்டலுக்கு கடந்த சில நாட் களுக்கு முன்னர் கொரோனா தொற்றாளர் என அடை யாளம் காணப்பட்ட நபர் சென்றமையை அடுத்து உயிரிழந்த நபர் உட்பட அங்கு பணிப்புரிந்த அனைத்து ஊழியர்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், தனிமைப்படுதலுக்காக வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் பிரேதப் பரிசோதனை இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

அத்துடன், பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த நபர் கொ ரோனா தொற்றாளர் இல்லை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.