பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி – ட்ரம்ப் கலந்துரையாடல்

282 0

tu-428x285பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடர்டே, போதைப்பொருளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கை சரியானது என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பில்ப்பைன்ஸ் ஜனாதிபதி தொலைபேசியின் ஊடாக டொனால்ட் ட்ரம்பை தொடர்பு கொண்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

போதைப்பொருளை கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் கடந்த ஜூன் மாதம் முதல் 4 ஆயிரத்து 800 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, பிலிப்பைன்ஸ் பிரதமர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை விமர்சனம் செய்த தலைவர்களில் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.