கிளிநொச்சியில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் (காணொளி)

388 0

sequence-01-still039இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் 225 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இந்நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி, ஆகிய பிரதேச செயலகங்களில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது.கண்டாவளைப் பிரதேச செயலகத்தில் நான்கு வேட்பாளர்களும், கரைச்சி பிரதேச செயலகத்தில் ஐந்து வேட்பாளர்களும், பூநகரி பிரதேச செயலகத்தில் நான்கு வேட்;பாளர்களும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் ஆறு வேட்பாளர்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

மொத்தமாக 225பேரைக் கொண்ட இவ்இளைஞர் நாடாளுமன்றத்துக்கு தொகுதி அடிப்படையில் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஊடாகத் தெரிவு தெரிவு செய்யப்படுவதுடன், 15 பிரதேச செயலாளர்களுக்கு அதிகமான பிரதேசங்களைக் கொண்ட மாவட்டங்களுக்கு போனஸ் அடிப்படையில் 9 உறுப்பினர்களும், பல்கலைக்கழகங்களில் இருந்து 15 உறுப்பினர்களும், சட்டக் கல்லூரியில் இருந்து 10 உறுப்பினர்களும், மாற்றுத் திறனாளிகளில் இருந்து 2 உறுப்பினர்களும், பாடசாலை மாணவர் தலைவர்கள் தலைவிகளில் இருந்து 10 உறுப்பினர்களும் இளைஞர் பிரதிநிதிகள் உள்ள வேறு அமைப்புக்களில் இருந்து 9 பேரும் அமைச்சர் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் சிபார்சில் 10 பேரும் நேர்முகப் பரீட்சை ஊடாகவும் மொத்தமாக 225 பேர் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இத்தேர்தலில் 2016.03.31ஆம் திகதிக்கு முன் புனரமைக்கப்பட்ட அல்லது அமைக்கப்பட்ட இளைஞர் கழகங்களின் 13 தொடக்கம் 29 வயதுடைய இளைஞர் கழக உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும்.    அத்துடன் தேர்தல் தொகுதிகளில் வசிக்கின்ற பல்கலைக்கழக மாணவர்கள், சட்ட பீட மாணவர்கள், மற்றுத்திறனாளிகள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து எழுத்து பரீட்சை மூலம் தங்கள் போனஸ் ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை சகல பிரதேச செயலகங்களிலும் டிசம்பர் 18ஆம் திகதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை தேர்தல் இடம்பெறவுள்ளதுடன், முதலாவது பாராளுமன்ற அமர்வு 2017 ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் மகரகமையில் அமைந்துள்ள இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.