சிறிலங்கா அமைச்சருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

381 0

சிறிலங்கா வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

எனினும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – புறக்கோட்டையில் அமைந்துள்ள பல மொத்த விற்பனையாளர்கள் அண்மையில் அமைச்சருடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, கொழும்பு – புறக்கோட்டையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொண்ட வியாபாரி ஒருவரும் அமைச்சருடனான கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமா என்ற சந்தேகத்தில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.