விக்கினேஸ்வரனை நேற்றிரவு அதிரடியாகச் சந்தித்தார் மாவை

284 0

தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனை அவரது நல்லூரிலுள்ள வாஸஸ்தலத்தில் நேற்றிரவு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றார் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது பொதுவான அரசியல் விடயங்களே பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலில் கடந்த காலத்தில் எதிரும் புதிருமாக இருந்த இருவரும் சந்தித்து –  மனந்திறந்து பேசியிருப்பது தமிழ் அரசியல் பரப்பில் உருவாகிவரும் மாற்றம் ஒன்றைப் பிரதிபலிப்பதாகவே கருதப்படுகின்றது.