விடுதலை செய்யப்பட்டார் குமார் குணரட்ணம் (படங்கள்)

316 0

03முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைத் தண்டனை அனுபவித்து வந்த முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்னம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலா விசாவில் இலங்கை வந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை மூலம், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக இவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து, 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் திகதி குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணைக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதி அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய குமார் குணரத்னத்தின் தண்டனைக் காலம் எதிர்வரும் 9ம் திகதி நிறைவடையவுள்ளது. எனினும், குமார் குணரத்னத்தை இன்று சிறையில் இருந்து அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர்.

01 02