வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக தாயத்தில் கொடிய போரினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் உள்ள 25 சிறார்களுக்கு கல்வி உபகரணங்கள் 27.11 .2016 அன்று யேர்மனியில் உள்ள அம்மா உணவகத்தின் அனுசரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரால் வழங்கப்பட்டது. தாயகத்தில் கல்வி கற்கும் மாணவச் செல்வங்கள் எதிர்நோக்கும் சவால்களை இனம்கண்டு இல்லாதொழிப்பதோடு எமது எதிர்கால சந்ததிக்கு வெளிச்சமான பாதையை உருவாக்கி கொடுப்பதில் அம்மா உணவகம் தனது தீராத கவனத்தை செலுத்தி வருகின்றது. எமது மண்ணுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களின் பெற்றோர்களுக்கான உதவித்திட்டமும் அம்மா உணவகத்தால் கடந்த 3 வருடங்களாக வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.







