மரணம் வென்ற மாவீரர்கள், மண்ணை நேசித்த மறவர்கள் ,இப் புனிதர்களை நினைவேந்தும் முகமாக யேர்மனியில் München நகரில் தமிழர் பண்பாட்டுக் கழகம் புலத்தில் பிறந்துவளரும் சிறார்கள் மற்றும் இளையோர்கள் மத்தியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி நிகழ்வுகள் நடாத்தினர். 26 .11 .2016 அன்று நடைபெற்ற இப் போட்டியில் பல சிறார்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். குறிப்பாக எமது தாயக விடுதலைப் போராட்டத்தை நோக்கிய கட்டுரைகள் யேர்மன் மொழியிலும் இளையோர்களால் ஆக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.








