போராட்டத்தை படம் எடுத்து மிரட்டிய புலனாய்வாளர்கள்

62 0

இரவு வேளைகளில் வீடுகளுக்கு வரும் புலனாய்வாளர்கள் தமது போராட்டம் தொடர்பில் கேட்டு அச்சத்துக்கு உள்ளாகி வருவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்,

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சிறுவர் தினத்தை துக்க தினமாக அனுஸ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இப் போராட்ட இடத்திற்கு அதிகளவான புலனாய்வாளர்கள் வந்து போரட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை புகைப்படம், மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தியிருந்தனர்.