பரந்தன்- பூநகரி வீதி 3 நாட்கள் போக்குவரத்துக்கு முற்றாக தடை

28 0

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியானது எதிர்வரும் 03-10-2020 தொடக்கம் தொடர்ந்தும் மூன்று நாளுக்கு அனைத்து போக்குவரத்துக்கும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என வீதி கிளிநொச்சி அபிவிருத்தி அதிகார சபையின்
நிறைவேற்றுப் பணிப்பாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.

பரந்தன் பூநகரி வீதியில் பரந்தனிலிருந்து 12 வது கிலோ மீற்றருக்கு அண்மையாக உள்ள 11/5 இலக்க இரும்பு பாலம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய பழுது திருத்தம் காரணமாக எதிர்வரும் 03,04,05-அதாவது வரும் சனி .,ஞாயிறு,திங்கள் ஆகிய மூன்று தினங்களும் பாலத்தின் திருத்தப் பணிகள் இடம்பெறவுள்ளதால் அப் பாதையின் ஊடான அனைத்து போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எனவும் எனவே பொது மக்கள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறும் கிளிநொச்சி வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார் ,

03.10.2020 சனிக் கிழமை காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் திருத்தப் பணிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறும் எனவும், இக் காலப்பகுதியில் துவிச் சக்கர வண்டி உள்ளிட்ட எந்த எந்த வாகனங்களும்
குறித்த வீதியினை பயன்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்