கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்

263 0

கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா நோய் ஏற்பட்டவர்களுக்கு உடலில் பல உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

அதுமட்டுமல்ல, அவர்களுடைய மனநிலையில் கூட ஏராளமான மாற்றங்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் கனவு காண்பதில் கூட அசாதாரண நிலை நிலவுகிறது.

இது சம்பந்தமாக அமெரிக்காவைச் சேர்ந்த மனநல நிபுணர்கள் சங்கம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

கொரோனா பாதித்த 2,888 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோசமான கனவுகள் அதிகமாக வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சொந்தங்களால் கை விடப்படுதல், வேலையிழப்பு, பண இழப்பு மற்றும் பயங்கர பாதிப்பு போன்றவை சம்பந்தமாக மோசமான கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற கனவுகள் மிக அதிகமாக வருவதும் தெரிய வந்தது.