11 வயது சிறுமியின் உயிரை பறித்த லொறி

316 0

ராகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலப்பனை பிரதான வீதியின் 70 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (16) மாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.

வீதியின் குறுக்காக பயணித்த சிறுமியை லொறி ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகல, சூரிய கந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.