போதைப்பொருள் வர்த்தகத்தில் இலங்கை அரசிற்கு தொடர்பு இல்லையாம்

196 0

sagala-e1447082655559கொள்கலன்களில் மறைத்து வைத்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருட்கள் வர்த்தகங்களுடன் அரசியல் தொடர்பு இருப்பது பற்றிய எந்தத் தகவலும் விசாரணைகளில் வெளியாகவில்லை என்று சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க சபையில் தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் சாகல ரத்நாயக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதியே இலங்கையில் அதிக தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

261 கிலோ ஹெரோயின் அதன்போது கைப்பற்றப்பட்டிருந்தது.

துறைமுகத்தில் கொள்கலன் சோதனை நடவடிக்கைகள் சுங்க பிரிவுக்கே பொறுப்பாக இருக்கின்றன.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் கடற்படையினரும் அதற்கு உதவிகளை வழங்குகின்றனர்.

தற்போது நாம் விசேட அதிரடிப் படையினரையும் சுங்கப் பிரிவினரின் கூடுதல் உதவிக்காக வழங்கியுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.