பிரபல குள்ள நடிகர் திருமணம்

261 0

ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் கிராமத்தை சேர்ந்த பிரபல குள்ள நடிகருக்கும் லட்சுமி என்பருக்கும் எளிய முறையில் திருமணம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் 3 அடி உயரம் உள்ள குள்ள நடிகர் தயாளன் (வயது 32). இவர் விஜயநகரம், சோக்கு சுந்தரம் உள்ளிட்ட பல்வேறு சினிமாவில் குள்ள நடிகர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருக்கும் பொன்னை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 3 அடி உயரமுள்ள லட்சுமி (29) என்பவருக்கும் சோளிங்கர் மூங்கிலேரி ராமபுரம் பகுதியில் உள்ள, ஆறுபடை முருகன் கோவிலில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து அவர்களுக்கு திருமண வாழ்த்து கூறினார்கள்.