தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு எதிரான மனு விசாரணைக்கு-உயர் நீதிமன்றம்

323 0

 

high-court-28-11-2016தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மூன்றை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் சேவையில் ஈடுபட்டுள்ள சில தனியார் பேரூந்துகளுக்கான அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மூன்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று, பிரதம நீதியரசர் கே.சிறீபவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமது அனுமதிப் பத்திரத்தை எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி இரத்துச் செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக, மனுதாரர் தரப்பு நீதிமன்றில் சுட்டிக்காட்டி, இதன்மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, தீர்ப்பளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் ஜனவரி மாதம் 26ஆம் திகதி குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.