தற்போதைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என தான் நம்புவதாக முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஏராளமான மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளமையால் மக்கள் அரசாங்கத்தின் மீது ஈர்க்கப்படுகி றார்கள் என அவர் தெரிவித்தார்.
நாட்டை ஆட்சி செய்யும் போது நல்லாட்சி அரசாங்கம் மக்களின் பிரச்சி னைகளை ஆராய்ந்து பார்த்து நடவடிக்கைகளை முன்னெடுத் திருந்தால் ஐக்கிய தேசிய கட்சிக்கு இன்று இந்த நிலைமையை ஏற்பட்டிருக்காது என அவர் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கம் இளைஞர்களுக்கு ஒரு வேலையேனும் வழங்கத் தவறி விட்டது என்றும், தற்போதைய அரசாங்கம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

