யாழில் ஹெரோயின் மற்றும் 13 தொலைபேசிகளுடன் இளைஞர் கைது

292 0

யாழில் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.

கொக்குவில் கம்பஸ் லேன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று(வியாழக்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய இளைஞரே விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின்படி கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் மற்றும் அவரிடம் இருந்து மீட்கப்பட்ட 13 தொலைபேசிகள் என்பன விசேட அதிரடிப் படையினரால், யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.