ரணில் விக்ரமசிங்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்து வெளியேறியுள்ளார்.
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே அவர் இன்று (வியாழக்கிழமை) முன்னிலையாகியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்கள் அண்மைய நாள்களில் குறித்த பொலிஸ் பிரிவில் வாக்குமூலமளித்தமை குறிப்பிடத்தக்கது

