சண்டிலிப்பாய்- மாசியப்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் 8 அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சண்டிலிப்பாய், மாசியப்பிட்டியிலுள்ள வீடொன்றில் கடந்த வாரம் பகல்வேளை, வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் 8 அலைபேசிகள் திருட்டுப் போயிருந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில், வீட்டில் குடியிருந்தவர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாட்டுக்கமைய மேற்கொண்ட விசாரணையில், மாசியப்பிட்டியைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரையும் தடுப்பு காவலில் வைத்து, மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

