மட்டக்களப்பு மாநகர சபையினால் மணல் வீதியில்லாத மாநகரம் எனும் கருத்திட்டம் முன்னெடுப்பு!

277 0

மட்டக்களப்பு மாநகர சபையின் ‘மணல் வீதியில்லா மாநகரம்’ எனும் கருத்திட்டத்தின் ஊடாக மணல் வீதிகளை கிறவல் வீதியாக செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி பணிச்சையடி பண்ணை வீதி, சின்ன ஊறணி மாதர் சங்க வீதி, மயாநாட்சி அம்மன் குறுக்கு வீதிகள் மற்றும் இருதயபுரம் மயாண வீதி ஆகிய வீதிகளை கிறவல் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மாநகர சபையின் சொந்த வருமானத்தின் மூலமாகவும், பொது மக்களின் வரிப்பணத்தின் ஊடாகவும் மாநகர சபையின் முழுமையான வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணிகளை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபையின் உறுப்பினர்களான க.ரகுநாதன், வி.பூபாலராஜா, இரா.அசோக் மற்றும் மாநகர பொறியியலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.