சஜின்வாஸின் பாதுகாப்பை உடனடியாக நீக்க ஜனாதிபதி உத்தரவு

427 0

z_p04-Sajinமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பை உடனடியாக விலக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்
இது தொடர்பான உத்தரவை ஜனாதிபதிஇ காவல்துறை மா அதிபருக்கு விடுத்துள்ளார்.
சிவில் சமூக பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு விடுத்தக்கோரிக்கைக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள ஒருவருக்கு சிறப்பு அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறித்த அந்த பிரதிநிதிகள் தமது அதிருப்தியை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதிஇ காவல்துறை மா அதிபரிடம் வினவியபோது இந்தப்பாதுகாப்பு முன்னாள் காவல்துறை மா அதிபரினால் வழங்கப்பட்டது என அவர் பதிலளித்துள்ளார்.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் பரிந்துரைக்காரணமாகவே இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அவர்இ ஜனாதிபதியிடம் தெரிவித்தார்
எனினும் உடனடியாக இந்த பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு ஜனாதிபதி காவல்துறை மா அதிபருக்கு தற்போது உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment