வவுனியாவில் விபத்து ஒருவர் சாவு!

251 0

வவுனியா – பறண்நட்டகல் பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவிலிருந்து ஓமந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனமும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். அத்துடன் விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் குடைசாய்ந்துள்ளதுடன், அதன் சாரதி சிறுகாயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.