பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் போதைப்பொருள் வர்த்தகர் உடன் தொடர்பு வைத்திருந்த சம்பவம் தொடர்பில் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி குறித்த அதிகாரிகள் சிலரின் வீடுகள் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரினால் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மினுவங்கொடையில் அமைந்துள்ள வீடொன்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தேகநபர்களான பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளால் அரிசி மூடைகளில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடமொன்றும் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

