சி.ஐ.டி.எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தனது பணி நீக்கம் மற்றும் இடமாற்றத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பிரதி பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட 17 பேரை பிரதிவாதிகளாக பெயரிட்டே அவர் இந்த மனுத்தாக்கலை செய்துள்ளார்.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த ஜனவரி மாதம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டு, காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் பிரதி அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் ஷானி அபேசேகர உதவி பொலிஸ் அத்தியட்சராக இருந்தபோது முன்னெடுத்ததாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒன்றின் ஒலிப்பதிவினால், இலங்கை பொலிஸ் சேவையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தினார் என்ற காரணத்துக்காக அவர் இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக் குழு அப்போது சுட்டிக்காட்டியது.

