கார் கதவுடன் மோதியவர் படுகாயம்; நல்லூரில் சம்பவம்!

367 0

யாழ்ப்பாணம் – நல்லூர் கோவில் வீதியில் இன்று (04 காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மறைந்த எம்பி மகேஸ்வரனின் சகோதரர் பரமேஸ்வரினின் காரில் இருந்தவர் சாரதி பக்க கதவினை திறந்து கொண்டு இறங்க முற்பட்டுள்ளார்.

இதன்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் கார் கதவுடன் மோதி விழுந்துள்ளார். விபத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் மயக்கமுற்றுள்ளார்.

இதனையடுத்து மீட்கப்பட்ட நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏற்றப்பட்டு சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.