கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நேற்று (03) இரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இயக்கச்சி பகுதியிலுள்ள ஒரு வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த தங்கராசா தேவதாஸன் (43-வயது) என்பர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

