
கூட்டு எதிர்க்கட்சியினால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் முன்னணியை வலுப்படுத்தும் வகையில் இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கூட்டு எதிர்க்கட்சியின் 52 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தநிலையில் கூட்டு எதிர்க்கட்சி, எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் புதிய சின்னத்துக்கு கீழ் போட்டியிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பதுளை அமர்வுக்கு மத்தியில் கொழும்பின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பதுளை அமர்வினைத் தொடர்ந்தும், இதேபோன்ற அமர்வுகள் ஏனைய பகுதிகளிலும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.