தமிழக மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டம்

356 0

Tamil_News_4099041223527தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தாக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக்கட்சி நேற்று முன்தினம் மதுரையில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
இதன்போது அவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கட்சியின் ஸ்தாபகர் டி வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனதாக்கட்சி, மீனவர்களின் விடயத்தில் காட்டுகின்ற அசமந்தபோக்கு கண்டிக்கத்தக்கது என வலியுறுத்தப்பட்டது.
இந்தநிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வை அடிப்படையாக கொண்டு இந்தப்பிரச்சினைக்கு தீர்வைக்காணவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்;டது.

Leave a comment