சிறிலங்காவில் பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

216 0

சிறிலங்காவில் நேற்று முதல் அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடிய 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பொது இடங்களில் முகக்கவசங்கள் இன்றி நடமாடிய 1217 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக தற்போது 2658 பேர் இதுவரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஊடரங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் விசேட கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.