விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் இன்னமும் செயற்படுகின்றனர்!

263 0

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் போன்ற சில சக்திகள் குறித்து நாங்கள் எச்சரிக்கையாகயிருக்கவேண்டியுள்ளது என இராணுதளபதி தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பொருத்தவரை அது குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதால் அதனை பற்றி பேசுவதை தவிர்க்கவேண்டும் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாடு எவ்வளவு தூரம் பாதுகாப்பானதாக உள்ளது என்ற உங்களின் கேள்விக்கு நாடு பாதுகாப்பாக உள்ளது அதற்கான உத்தரவாதத்தை அளிக்கமுடியும் என்பதே எனது பதில் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் போன்ற சில சக்திகள் குறித்து நாங்கள் எச்சரிக்கையாகயிருக்கவேண்டியுள்ளது என இராணுதளபதி தெரிவித்துள்ளார்.

நாட்டிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக தோற்கடித்து துடைத்தெறிந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் அவர்களின் ஆதரவாளர்களும் அனுதாபிகளும் இன்னமும் செயற்படுகின்றனர் வெளிநாடுகளில் நிதிசேகரிப்பில் ஈடுபடுகின்றனர் என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

அந்த நாடுகளில் வாழ்ந்து கொண்டு அவர்கள் இதனை தொடர விரும்புகின்றனர்,அவர்கள் விடுதலைப்புலிகளிற்கு ஒக்சிசனை வழங்கமுயல்கின்றனர் அது நாட்டிற்கு வெளியே இடம்பெறலாம் என தெரிவித்துள்ள சவேந்திரசி;ல்வா அவர்கள் இலங்கையில் சிலரை தமது செல்வாக்கிற்கு உட்படுத்த முயல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த பத்து வருடங்களில் நாங்கள் இதனை முறியடித்துள்ளோம், நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் எனவும் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்பு நிலை குறித்து ஒவ்வொரு வாரமும் தேசிய பாதுகாப்பு சபையுடன் கலந்தாலோசிக்கின்றார் எனவும்; தெரிவித்துள்ள இராணுவதளபதி நாங்கள் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தலிற்காக அறிகுறிகள் எதனையும் காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் வித்தியாசமான தீவிரவாதமொன்று வேறு ஒரு திட்டத்தை வகுக்கலாம்,ஆனால் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கின்றோம், எங்களின் புலனாய்வு உச்சநிலைக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.